வாகனக் கொள்ளையத் தடுக்க பெருந்தொகை செலவிடும் கனடிய அரசு
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்று வரும் வாகன கொள்ளைச் சம்பவங்களை தடுக்க பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் இதற்கென 18 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. மாகாண பொலிஸ் பிரிவிற்கு இந்த நிதி ஒதுக்கப்படும் வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வாகனங்கள் அடிக்கடி கொள்ளையிடப்படுவது மாகாணத்திற்கு பெரும் நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளதாக மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் மிகவும் சூட்சுமமான முறையில் தி;ட்டமிட்டு கொள்ளையிடப்படுவதாகத் தெரிவிக்கப்படகின்றது.
சில கொள்ளை கும்பல்கள் இதன் பின்னணியில் செயற்பட்டு வருவதகாவும் இவற்றை கண்டு பிடித்து தண்டிப்பதற்கு இந்த நிதி உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனக் கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் 12 விசேட நடவடிக்கைகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் 72 வீதத்தினால் அதிகரித்துள்ளன.