சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுனர் தகவல்
நாட்டின் பிணை எடுப்புத் திட்டத்தின் முதல் மறுஆய்வுக்கு, சர்வதேச நாணய நிதியம் அடுத்த மாதம் ஒப்புதல் அளிக்கும் என இலங்கை எதிர்பார்க்கிறது.
இது பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து 900 மில்லியன் டொலர் நிதியை விடுவிக்க வழிவகை செய்யும் என்று மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்து ஏழு தசாப்தங்களில் மிக மோசமான நிதி நெருக்கடியில் இலங்கை மூழ்கியது.
சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு
எனினும், மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பு 2.9 பில்லியன் டொலர்களை விடுவித்தமையை அடுத்து பொருளாதாரம் ஓரளவு நிலைப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், இரண்டாவது தவணை நிதியில் 330 மில்லியன் டொலர்கள் கிடைத்த பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடமிருந்து மேலதிக நிதியுதவியை இலங்கை பெற முடியும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேய நாணய நிதியத்தின் ஒப்புதலை டிசம்பர் 6 ஆம் திகதிக்குள் எதிர்பார்ப்பதாக இலங்கையின் திறைசேரி செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.