அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
2024 இற்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பில் 5000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (25.11.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஐயாயிரம் ரூபாவை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதிய அதிகரிப்பு
அதற்கு மாதாந்தம் ஒரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரம் ரூபா தேவைப்படுகிறது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கான 2500 ரூபா அதிகரிப்பை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கு எட்டு இலட்சம் ரூபா பணம் தேவைப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.