நுரைச்சோலை லக்விஜய அனல் மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் வெளியான தகவல்!
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்னுற்பத்தி செயலிழந்து காணப்பட்டநிலையில் மீண்டும் அதன் செயற்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவிக்கையில்,
தேசிய மின் கட்டமைப்பு
“பராமரிப்பு பணிகளுக்காக செயலிழக்க செய்யப்பட்ட நுரைச்சோலை லக்விஜய அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கியை எதிர்வரும் 29 ஆம் திகதி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கவுள்ளோம்.
அத்துடன், இயந்திரக்கோளாறினால் செயலிழக்க செய்யப்பட்ட நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியை அடுத்த மாதம் 16 ஆம் திகதி தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான இயலுமை காணப்படுகிறது.” என்றார்.