;
Athirady Tamil News

ஹமாஸ் எடுத்த முடிவு : உலக நாடுகள் பாராட்டு

0

இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க தாமதிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாக அதன் இராணுவப் பிரிவின் அறிக்கை கூறுகிறது.

பணயக் கைதிகள் விடுதலை

இஸ்ரேல் மற்றும் ஹமாசிற்கு இடையில் 4 நாள் மோதல் தவிர்ப்பு நடைமுறைக்கு வந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தினர் நேற்றைய தினம் 13 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுதலை செய்திருந்தனர்.

அத்துடன் காசா பகுதியில் 13 இஸ்ரேலிய குடிமக்கள் உட்பட ஹமாஸ் இயக்கத்தினர் வசமிருந்த 24 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய குடிமக்கள் 13 பேர், தாய்லாந்து குடிமக்கள் 10 பேர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகன் விடுவிக்கப்பட்டதாக கட்டார் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்களில் 70 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண்களும், ஒரு தாயும் அவரது ஏழு வயது மகளும் அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.

அவர்களில் ஒருவர் 78 வயதான மார்கலிட் மோசஸ் எனவும் அவர். புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இவர்கள் எகிப்து வழியாக இஸ்ரேலைச் சென்றடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பலஸ்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேற்குக் கரையிலுள்ள ரமல்லாவுக்கு அருகே பெய்துனியா சோதனைச் சாவடியில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.