;
Athirady Tamil News

விமான நிலையத்தில் சலசலப்பு

0

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பு இன்று (2023.11.26) மதியம் முதல் செயலிழந்துள்ளதையடுத்து வெளிநாடுகளுக்குச் செல்ல வந்த ஆயிரக்கணக்கான விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு பல தனியார் நிறுவனங்களால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், சரியான பராமரிப்பு இல்லாததால், இது ஒரு மாதத்திற்கு பல முறை இதுபோன்று செயலிழந்து வருவதாகவும் குடிவரவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த கணினி அமைப்பு சர்வதேச இன்டர்போல் பொலிஸாருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், அதன் வேகம் குறைவதால் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் கணினி அமைப்பு பலவீனமடையும் என்று பேச்சாளர் கூறினார்.

11/26 நண்பகல் 12.20 மணியளவில் கணினி அமைப்பு படிப்படியாக மீண்டும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விமான நிலையத்தில் அதிக பயணிகள் போக்குவரத்து சிறிது தளர்த்தப்படுவதாகவும் பேச்சாளர் மேலும் கூறினார்.

11/26 பிற்பகல், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் பல விமானங்களும் அவ்வாறான இடங்களிலிருந்து விமான நிலையத்திற்கு வரும் பல விமானங்களும் இதனால் பாதிக்கப்படலாம் என்றும் பேச்சாளர் எச்சரித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.