;
Athirady Tamil News

மட்டகளப்பில் உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்தை பார்வையிட்ட சாணக்கியன்

0

அரச இராணுவத்துடன் அல்லது புலானாய்வுத்துறையினரின் அனுசரணையுடனே மட்டகளப்பு- வாகரை கல்லடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

குறித்த இடத்திற்கு இன்று(26.11.2023) விஜயம் மேற்கொண்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“2023 கார்த்திகை மாதத்திலே இந்த வாரம் தமிழர்களுக்கு முக்கியமான வாரமென்பது தமிழர்களுக்கு தான் தெரியும்.

விடுதலை பேராட்டம்
இந்த மண்ணுக்காக பேராடி இந்த மண்ணிலே எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழ வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக ஒரு விடுதலை பேராட்டத்திலே ஈடுபட்டு இலட்சக்கணக்கான,ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவத்தினரால் மாறி மாறி வந்த சிங்கள அரசாங்கத்தினரால் கொள்ளப்பட்டனர்.

அதைப்போல இறுதி யுத்தத்திலே ஆயிரங்கணக்கான மக்களை கொத்து கொத்தாக கொன்றனர்.

அவ்வாறான நிலையிலே இந்த வாரத்திலே விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடும் தமிழ் மக்கள் தங்கள் இழந்த உறவுகளை நினைவுகூறும் வகையிலே வடக்கு கிழக்கில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடை பெற்றுவருகின்றன ”என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.