இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்
இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 154 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த முதலீடுகள் தவிர உள்நாட்டு முதலீட்டாளர்கள், 25 கோடியே 80 இலட்சம் அமெரிக்க டொலர் முதலீடு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பிற நாடுகளின் முதலீடு
அதேவேளை, வெளிநாட்டவர்கள் இலங்கையை புறக்கணிக்கவில்லை என்பதும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் இலங்கை முதலீட்டு சபை 150 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையில் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட ஆர்வமாக உள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.