;
Athirady Tamil News

துபாயில் மகளின் திருமணத்தை விமானத்தில் நடத்தி அசத்திய இந்திய வைர வியாபாரி

0

ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒருவர், தனது மகளின் திருமணத்தை துபாயில் தனியார் ஜெட் விமானத்தில் நடத்தியுள்ளார்.

அமீரகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் திலீப் பாப்லியின் (Dilip Popley) மகள் விதி பாப்லி (Vidhi Popley), நடுவானில் போயிங் 747 விமானத்தில் ஹ்ரிதேஷ் சைனானி (Hridesh Sainani) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் திருமணம் நவம்பர் 24-ம் திகதி துபாயில் தனிப்பயனாக்கப்பட்ட போயிங் 747 விமானத்தில் நடைபெற்றது.

நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் உட்பட ஏறத்தாழ 350 விருந்தினர்கள் முன்னிலையில், துபாய் தெற்கில் உள்ள ஜெடெக்ஸ் தனியார் முனையத்தில் இந்த ஆடம்பரமான திருமணம் நடந்தது.

இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், 28 ஆண்டுகளுக்கு முன்பு, திலீப் பாப்லியின் திருமணமும் இதேபோல் விமானத்தில் தான் நடந்தது. அந்த திருமணம் ஏர் இந்தியா (Air India) விமானத்தில் நடந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் Popley & Sons Jewellers Private Limited என்கிற தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை நிலையங்களின் மதிப்புமிக்க வலையமைப்பிற்கு பெயர் பெற்ற போப்லி குடும்பம், துபாயில் இருந்து ஓமனுக்கு மூன்று மணி நேர பயணத்தின் போது, நடுவானில் இந்த அசாதாரணமான திருமணத்தை ஏற்பாடு செய்தது.

திருமணத்திற்கு பின் விருந்தினர்களுக்கு விமானத்திலேயே உணவும் வழங்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.