யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நேற்று நடைபெற்றது.
மாவீரர் வாரம் கடந்த செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகிய நிலையில், ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் இடம்பெற்று வருகிறது.
இதன்போது இன்றையதினமும் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.