உக்ரைனின் பதிலடி தாக்குதல்! முறியடித்த ரஷ்யா
ரஷ்யாவின் மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல்களை முறியடித்ததாக பிராந்திய ஆளுநா் ஆண்ட்ரே வோரோபியேவ் தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தாக்குதல்களால் மூன்று கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், இதில் யாருக்கும் காயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளாா்.
பதிலடி தாக்குதல்
கடந்த(25) சனிக்கிழமை கீவ் நகரத்தை இலக்குவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஆனாலும், மொஸ்கோ பிராந்தியத்தில் 24 ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொஸ்கோவிலிருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள டுலா நகரில் 12 மாடி குடியிருப்பில் ஒரு ட்ரோன் தாக்கியதாகவும், இதில் சிலா் காயமடைந்ததாகவும் ஆண்ட்ரே வோரோபியேவ் கூறியுள்ளார்.
தாக்குதல் அபாயம்
ட்ரோன் தாக்குதல் அபாயம் கருதி மொஸ்கோவில் உள்ள இரு விமான நிலையங்கள் சிறிது நேரம் மூடப்பட்டு, பின்னா் இயங்கத் தொடங்கியதாக ரஷிய அரச செய்தி நிறுவனமான ‘டாஸ்’ தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் இதுவரை அதிகாரபூா்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.