முல்லைத்தீவில் கொடிகளை கிழித்து பொலிஸார் அட்டகாசம்; மக்கள் வேதனை
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தாயகம் எங்கும் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொடிகளை கிழித்தெறிந்து பொலிஸார் அட்டகாசம் செய்துள்ளனர்.
கொடியேற்றலாம், கார்த்திகை மலரைப் பயன்படுத்தலாம், துயிலும் என்ற சொல்லை எந்தக் காட்சிகளிலும் பயன்படுத்தலாம், பதாகைகளை பயன்படுத்தலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று காலை உத்தரவு வழங்கியது.
எனினும் பொலிஸார் புறக்கணித்து இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டமை மக்கள் மனங்களை வேதனை அடைய வைத்துள்ளது.