சீனாவிற்கு மற்றுமொரு அனுமதி கொடுத்த இலங்கை
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் எரிசக்தி நிறுவனமான சினோபெக் நிறுவனத்திற்கு ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையோன்றை நிறுவுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விடயத்தை மின்சக்தி மற்றும் எரிச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சீன நிறுவனத்தின் இந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு என்பதுடன் சுத்திகரிப்பு நிலையத்துடன், அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகள் மற்றும் பயிற்சி மையமும் கூடுதலாக அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பாரிய முதலீடு
அம்பாந்தோட்டை துறைமுகமானது, இலங்கையின் இரண்டாவது பெரிய துறைமுகமாகும், இது 010-ம் ஆண்டு திறக்கப்பட்டதுடன் 2017-ம் ஆண்டு முதல் சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த துறைமுக கட்டுமானத்துக்கு சீனாவின் எக்சிம் வங்கி கடன் அளித்துள்ளதோடு, தற்போது இங்கு சீனா பாரிய முதலீடு ஒன்றை செயதுள்ளது.