;
Athirady Tamil News

முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அரசு செலவிடம் பெருந்தொகை பணம்: வெளியான புதிய தகவல்

0

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோருக்கு அரசாங்கம் செலவிட்ட தொகை எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

இதனால், செயலர் கொடுப்பனவுகள், எரிபொருள் கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதிய பலன்கள் என அரசாங்கம் மாதாந்தம் 3,715,350 ரூபாவை செலவிடுவதாக தெரியவந்துள்ளது.

செயலாளர் கொடுப்பனவு
இத்தகவலுக்கமைய, ரணசிங்க பிரேமதாசவின் மனைவிக்கு செயலாளர் கொடுப்பனவாக 25,000 ரூபாவும் எரிபொருள் கொடுப்பனவாக 100,000 ரூபாவும் ஓய்வூதிய கொடுப்பனவாக 65,000 ரூபாவும் வழங்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாதாந்த செயலக கொடுப்பனவாக 100,000 ரூபாவையும், எரிபொருள் கொடுப்பனவாக 679,950 ரூபாவையும், ஓய்வூதிய கொடுப்பனவாக 97,500 ரூபாவையும் பெறுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயலாளர் கொடுப்பனவாக 50,000 ரூபாவும், எரிபொருள் கொடுப்பனவாக 679,950 ரூபாவும், ஓய்வூதிய கொடுப்பனவாக 97,500 ரூபாவும் பெறுகின்றனர்.

ஓய்வூதிய கொடுப்பனவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயலாளர் கொடுப்பனவாக 100,000 ரூபாவையும், எரிபொருள் கொடுப்பனவாக 679,950 ரூபாவையும், ஓய்வூதிய கொடுப்பனவாக 97,500 ரூபாவையும் பெறுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு செயலாளர் கொடுப்பனவாக ரூபாய் 100,000, எரிபொருள் கொடுப்பனவாக 5 லட்சம் ரூபாய் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவாக 97,500 ரூபாய் பெறுகின்றார்.

1986இன் 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அல்லது கணவரும் அவர் வாழ்நாளில் ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலர் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள். மேலும், அவர்கள் வாழ்நாளில் தங்குவதற்கு ஏற்ற வீடு வாடகையே இல்லாமல் கொடுக்கப்படுகிறது.

இதுதவிர பாதுகாப்புக்காக சிலருக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மாதாந்த கொடுப்பனவுகள்
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் தமது ஓய்வூதியத்தை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தாமல் குறிப்பிட்ட நிதியில் வரவு வைக்க வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர். ஆனால், குறிப்பிட்டபடி நிதியில் அப்படி பணம் வரவு வைக்கப்படவில்லை எனவும் ஆனால் அவர்கள் இந்த கொடுப்பனவுகளை அவர்களது தனிப்பட்ட வங்கி கணக்கில் மட்டுமே வரவு வைத்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் விதவைகளுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன.

இந்த வரவு செலவுத் திட்டத்தின்படி, இந்த மொத்த செலவுகளுக்காக 2024 ஆம் ஆண்டிற்கு 110 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்காக 84 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.