;
Athirady Tamil News

ஓமானில் உயிரிழந்த இலங்கைப்பெண்; மர்மம் நிலவுவதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

0

ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த இலங்கைப் பெண் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், உயிரிழந்த பெண்ணின் சடலம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் புத்தளம் – ஆனமடுவ குமாரகம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ஜே.ஏ.ஷிரோமி பிரதீப் ஜயக்கொடி என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு துரதிஷ்டவசமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பெண்ணான இவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது தாய், தந்தையருக்கு உதவியாக வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார்.

குடும்பத்தினரின் குற்றச்சாட்டு
இருப்பினும், திருமணமாகாத குறித்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்கள் கூறுகையில், அவர் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவரிடம் வலிமை இல்லை என தெரிவித்தனர்.

போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தும் நிகவெரட்டிய கொட்டாஹெர ஹலவத்த பிரதேசத்தில் வசிக்கும் நபர் மற்றும் ஒருவர் ஊடாக சுற்றுலா விசா பெற்றுக்கொடுத்து இந்த பெண் மோசடியான முறையில் கடந்த (20.07.2023) ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓமானில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய பெண் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அவர் நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அழைப்பின் பின்னர் எந்த தகவலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதனையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இது தொடர்பில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருந்த போதிலும், அவர் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றுள்ளதாகவும், தகவல்களை பெற்றுக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

You might also like

Leave A Reply

Your email address will not be published.