யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் (28) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில், பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடு, சிறுவர் துஷ்பிரயோகம், பெற்றோரை இழந்த சிறுவர்களின் விபரங்கள் மற்றும் அவர்களுக்கான தேவைகள், பிரச்சனைகள், பிரதேச மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள், சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள், கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழுக்களின் செயற்பாடுகள், சிறுவர்களுக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம் பெற்றுக்கொடுத்தல், சிறுவர் தொடர்பான பிரதேச மட்ட செயற்பாடுகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
அத்தோடு எதிர்வரும் மார்கழி மாதம் இருபதாம் திகதி மாவட்ட செயலகத்தில் சிறுவர்களுக்கான விசேட பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களை பதிவுசெய்யும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதில் மேலதிக அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள, உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக பிரதி பதிவாளர் நாயகம், பொலிஸார், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தார்கள்.