;
Athirady Tamil News

பிணைக் கைதியான 10 மாத குழந்தை: இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உயிரிழந்த குடும்பம்

0

காசா மீதான இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலின் போது 10 மாத குழந்தை Kfir உயிரிழந்து விட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளனர்.

பிணைக் கைதிகள்
அக்டோபர் மாதம் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் 240க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக காசா பகுதிக்கு கடத்தி சென்றனர்.

இதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை மீட்கவும், ஹமாஸ் படையினரை ஒழித்து கெட்டும் நோக்கியிலும், பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை அறிவித்து சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி வந்தது.

இஸ்ரேலின் இந்த ஏவுகணை தாக்குதல் காசா பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 50 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் படையினர் அறிவித்து இருந்தனர், ஆனால் யார் யார் கொல்லப்பட்டனர் என்ற தகவலை அப்போது ஹமாஸ் அறிவிக்கவில்லை.

உயிரிழந்த இஸ்ரேலிய குடும்பம்
தற்போது இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினரும் இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் இதுவரை கிட்டத்தட்ட 63 இஸ்ரேலியர்கள் மற்றும் 20 வெளிநாட்டினரை ஹமாஸ் படையினர் விடுதலை செய்துள்ளனர், 180 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திய போது அப்பகுதியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இஸ்ரேலிய Bibas குடும்பம் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப்படை பிரிவு தெரிவித்துள்ளது.

அல் கஸ்ஸாம் படைகள் வழங்கிய தகவலின் அடிப்படையில், போர் நிறுத்தத்திற்கு முன்னதாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 10 மாத குழந்தை Kfir, 4 வயது சகோதரர் Ariel மற்றும் அவர்களது தாய் Shiri என Bibas குடும்பத்தில் உள்ள 3 பேர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

ஆனால் குழுக்களின் இந்த இறப்பு கோரல்களை ஸ்கை நியூஸ் தொலைகாட்சி சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.