அமெரிக்க- கனேடிய சீக்கியரை கொல்ல சதி… இந்தியர் ஒருவர் மீது வழக்கு பதிவு
அமெரிக்கவாழ் சீக்கியர் மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், இந்தியர் ஒருவர் மீது தற்போது வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வைத்து கொல்ல
கனடா மற்றும் அமெரிக்க குடிமகனான சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் என்பவரை அமெரிக்காவில் வைத்து கொல்ல நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அதிகாரி ஒருவர் பண்ணுன் மீதான கொலை சதியின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் இந்தியரான நிகில் குப்தா என்பவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கும் பதிந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், நிகில் குப்தாவுக்கு 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை உறுதி என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிகாரிகள் தரப்பு பகிர்ந்துள்ள தரவுகளை ஆய்வு செய்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், அமெரிக்க அதிகாரிகள் தரப்பு பகிர்ந்துள்ள தரவுகளை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக கூறும் இந்திய தரப்பு,
வெள்ளைமாளிகை வெளியிட்ட அறிக்கை
அந்த தரவுகள் நமது தேசிய பாதுகாப்பு நலன்களையும் பாதிக்கும் வகையில் உள்ளதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்கனவே அந்த தரவுகளை ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, பண்ணுன் மீது இந்தியா தரப்பிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் பயணிப்பது உயிருக்கு அச்சுறுத்தலாக முடியலாம் என சமூக ஊடகத்தில் பண்ணுன் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய இந்திய அதிகாரிகள், நவம்பர் 20ம் திகதி அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க மண்ணில் ஒரு சீக்கியரை கொல்வதற்கான சதித்திட்ட விவகாரத்தை அமெரிக்கா மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்த விவகாரத்தை இந்திய உயர் அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.