;
Athirady Tamil News

மலையகம் -200

0

மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்” என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று ஆரம்பமானது.

இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகியுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் மூன்றாம் திகதி வரை இடம்பெற இருக்கிறது.

யாழ்ப்பாணம் சிவில் அமைப்புகள், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் இந்த நிகழ்வின் இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

“யாழில் மலையகத்தை உணர்வோம்” நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தில் மலையக மக்களின் கடந்தகால மற்றும் தற்போதைய வாழ்வியலை உணர்த்தும் கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.