சட்டவிரோதமான முறையில் புற்றுநோய்க்கான மருந்துகளை விற்பனை செய்த நபர் கைது!
சட்டவிரோதமான முறையில் புற்றுநோய்க்கான மருந்துகளை விற்பனை செய்த நடமாடும் விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் கம்பஹா மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர் பொது வைத்தியசாலையின் புற்று நோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு அண்மித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் வைத்து மருந்துகளை விற்பனை செய்துள்ளார்.
மருந்து விற்பனை
அலுவலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமான முறையில் மருந்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
இவர் ராகம பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என தெரிய வந்துள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது புற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் இவ்வகையான மருந்துகள் விற்பனை பிரதிநிதி ஒருவரால் தமக்கு வழங்கப்படுவதாகவும், குறித்த மருந்துகள் தமக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவரிடம் 16 வகையான தடுப்பூசிகள் மற்றும் புற்று நோயாளர்களுக்கான ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.