மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!
தாமதமாகி வரும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அச்சு இயந்திரங்கள் கிடைக்காததால் சாரதி உரிமம் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.
900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள்
திங்களன்று திணைக்களத்திற்கு மூன்று அச்சு இயந்திரங்கள் கிடைத்துள்ளதாக அறிவித்த அவர், கிட்டத்தட்ட 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படவுள்ள நிலையில் அச்சிடும் பணிகளி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியின் விளைவாக இறக்குமதிக்கான கடன் கடிதங்களை பெற முடியாததால் அனுமதிப்பத்திரங்களுக்கான அட்டைகளை இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டாலும், அச்சு இயந்திரங்களின் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்று அச்சிடும் இயந்திரங்களின் வருகையுடன், இந்த வாரத்தில் அச்சிடும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார். அந்தவகையில் , 06 மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடித்து முடிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.