பெற்றோல், டீசல் விலை குறைப்பு
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது.
பெற்றோல் 92 ஒக்ரைன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 346 ரூபாயாகும்.
95 ஒக்ரகைன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 9 ரூபாயால் அதிகரித்து 426 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாயினால் அதிகரித்து 434 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீசல் ஒரு லீற்றரின் விலை 27 ரூபாயினால் குறைத்து 329 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாயினால் குறைத்து 247 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.