கொழும்பில் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் தீவிரமாக பரவும் டெங்கு
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 72 அரச நிறுவனங்கள் மற்றும் 53 பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பெருக்கம் இனங்காணப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகரசபையின் சுகாதார திணைக்களத்தினால் 121 அரச நிறுவனங்கள் மற்றும் 65 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
மழையுடனான காலநிலை காரணமாக டிசம்பர் மாதம் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
டெங்கு நுளம்புகள்
நாட்டிலுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் 47 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொதட்டுவ, மஹரகம போன்ற பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தெரியவந்துள்ளது.