வீட்டுத்திட்ட கலந்துரையாடல்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இத்திட்டத்தில் யாழ் மாவட்டத்திற்காக பத்தாயிரம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான பயனாளிகள் தெரிவு மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வீட்டுத்திட்ட நிபந்தனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
மேலும் சௌபாக்யா அடுத்த ஆண்டுக்கான வேலைத்திட்டம் தயாரித்தல், மணல்அகழ்வு, வீட்டுத்தோட்டம், காணி விடுவிப்பு தொடர்பான கோரிக்கைகள், கிராம சேவையாளர் அலுவலகத்துக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட செயலர், மேலதிக செயலர், வட மாகாண ஆளுநரின் செயலாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டிருந்தார்கள்.