கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஒளிவிழா
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஒளிவிழா 01.12 . 2023 வெள்ளி காலை கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டு திருப்பலியை ஒப்புக்கொடுத்ததுடன் ஆசிரிய மாணவர்களுக்கு விசேட அருட்பிரசாதம் வழங்கி ஒளிவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர் மாணவர்களுக்கான பதக்கங்களை சூட்டியும் சான்றிதழ்களை வழங்கியும் கௌரவித்தார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் கே. ஜெ பிரட்லி கலந்து கொண்டார்.
கௌரவ விருந்தினர்களாக கோப்பாய் பங்கு அருட்தந்தை எம.எல்.ஒன்பேட் அடிகளார் மறைக்கல்வி நடுவு நிலைய இயக்குனர் அருட்பணி டபிள்யூ.ஜேம்ஸ் அடிகளாரும் கலந்து கொண்டனர்.
இனிய விருந்தினர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதி கலாநிதி சு பரமானந்தம் சிரேஷ்ட விரிவுரையாளர்களான பப்சி மரியதாஸ், எஸ். கெலன் மற்றும் தேசிய கல்விய கல்லூரியின் ஆசிரியர் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வாழ்த்துரைகளை பிரதி அதிபர் க. கோபாலகிருஷ்ணன் கிறிஸ்தவ மன்ற காப்பாளர் பிரபாலினி தனம் ஆகியோர் நிகழ்த்தினர்
கலாசாலையில் நீண்ட காலமாக கத்தோலிக்க பாடத்தை சிறப்புற போதித்தமைக்காக கிறிஸ்தவ மன்றத்தின் சார்பில் விரிவுரையாளர் யே. பாலகுமார் கௌரவிக்கப்பட்டார். கௌரவத்தை பேராயர் மேற்கொண்டு மதிப்பளித்தார்.
கலாசாலையில் அண்மைக்கால வரலாற்றில் முதன்முறையாக பேராயர் ஒருவர் கலாசாலைக்கு வருகைதந்தமை இதுவே முதல் தடவை ஆகும் கலாசாலைக்கு வருகை தந்த பேராயர் அவர்கள் கலாசாலை சமூகத்தினர் தவில் நாதஸ்வர இசையுடன் வாயிலிருந்து மண்டபம் வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
பேராயர் தனது வருகையின் போது கலாசாலையில் அமைந்துள்ள மரியன்னை சிற்றாலயத்தையும் தரிசித்தார்.