இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ந்த ஹமாஸ் ஏவுகணைகள்: இடைமறித்த அயர்ன் டோம்: புகைப்படங்கள்
போர் நிறுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய நகரங்கள் மீது ஹமாஸ் படையினர் தங்கள் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
முடிவடைந்த போர் நிறுத்தம்
ஹமாஸ் படையினர் போர் நிறுத்தத்தை மீறி இரண்டு ராக்கெட்டுகளை இஸ்ரேலிய தரப்பு மீது ஏவியதாக தெரிவித்து குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து இஸ்ரேலிய ராணுவ படைக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே சரமாரி தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனால் இஸ்ரேலிய ராணுவத்தின் ஏவுகணை தடுப்பான அயர்ன் டோம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில் மொத்தம் 10 அயர்ன் டோம் ஏவுகணை அமைப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
போர் நிறுத்தத்தை இஸ்ரேல் திரும்ப பெற்று கொண்டதை அடுத்து இன்று காலை முதல் காசா நகரில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட சில நகரங்கள் மீது ஹமாஸ் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு ஹமாஸ் அமைப்பினர் ஏவிய டஜன் கணக்கான ஏவுகணை இஸ்ரேலின் அயர்ன் டோம் இடைமறித்து அழித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் இன்னும் 137 பிணைக் கைதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.