ஆப்பிள், மீன், வெங்காயம் ஆகியவற்றிக்கு விசேட வியாபாரப் பண்ட வரி: இலங்கை ஜனாதிபதி அறிவிப்பு
இலங்கையில் வெண்ணெய், பேரீச்சம்பழம், திராட்சை ஆகிய பொருட்களுக்கு புதிய வரி நடைமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விதித்துள்ளார்.
புதிய வரி விதிப்பு
இலங்கையில் பல்வேறு பொருட்களுக்கு புதிய விசேட வியாபார பண்ட வரி முறையை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்க அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில பொருட்களுக்கான வியாபாரப் பண்ட வரியை விதிக்க தீர்மானித்துள்ளார்.
இந்த வரி நடைமுறையானது 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி விதிக்கப்பட்ட பொருட்கள்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விதித்துள்ள இந்த புதிய விசேட வியாபார பண்ட வரியில், யோகட், வெண்ணெய், பேரீச்சம்பழம், திராட்சை, ஆப்பிள், மீன் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.