கடலில் நீராட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்
எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் கடலில் இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் (01) நண்பர்களுடன் நீராடச் சென்ற போதே இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
எகொடஉயன மீனவர் இல்லத்தில் வசிக்கும் 19 வயதுடைய சுபுன் சதுரங்க என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேடும் நடவடிக்கை
காணாமற்போன இளைஞனை தேடும் நடவடிக்கையை பிரதேசவாசிகளும் பொலிஸாரும் முன்னெடுத்த போதிலும், நேற்று மதியம் வரையிலும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன இளைஞன் வேலைக்காக நேர்காணலுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர் மேலும் இரு இளைஞர்களுடன் இணைந்து நீராடச் சென்றிருந்த போது இவ்வாறு தீடீரென வந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
எகொடஉயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.