இன்னும் காத்திருக்க வேண்டாம்… சீனா மீது பயணத்தடை விதிக்க ஜோ பைடனுக்கு அழுத்தம்
சீனாவில் சுவாச நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டின் மீது பயணத்தடை விதிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் செனட்டர்களின் குழு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
ஜோ பைடனுக்கு அழுத்தம்
குடியரசுக் கட்சியின் செனட்டர் மார்கோ ரூபியோ தலைமையிலான குழு ஒன்றே கடிதமூடாக ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அழுத்தம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
We asked Biden to ban travel to and from China until we know more about this “mystery pneumonia” outbreak https://t.co/eeufkufVII
— Marco Rubio (@marcorubio) December 1, 2023
சீனாவில் பெருகி வரும் சுவாச நோய் பாதிப்பு தொடர்பில் உலக சுகாதார அமைப்பும் போதுமான தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என சீனாவுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
மார்கோ ரூபியோ தலைமையிலான குழு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில், பொது சுகாதார நெருக்கடிகள் ஏற்பட்டால், பொதுமக்களிடம் பொய் சொல்லும் நீண்ட வரலாறு சீனாவுக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றின் போதும் உண்மையை மழுங்கடித்து, வெளிப்படைத்தன்மை இல்லாமல் சீனா செயல்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கும் என நாம் காத்திருக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
பயணத்தடை விதிக்கப்பட்டால்
சீனாவுக்கு அவர்கள் விசுவாசமாக இருக்கவே முயல்வார்கள் எனவும் மார்கோ ரூபியோ தலைமையிலான குழு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், அமெரிக்கர்களின் சுகாதாரத்தையும், நமது பொருளாதாரத்தையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நாம் உடனே எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, சீனாவில் பரவும் இந்தப் புதிய நோயினால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி மேலும் அறியும் வரை, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பயணத்தை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இப்போது பயணத்தடை விதிக்கப்பட்டால், நமது நாட்டை மரணம், ஊரடங்கு, கட்டுப்பாடுகள் மற்றும் பிற்காலத்தில் ஏற்படும் மேலும் பாதிப்புகளிலிருந்து காப்பாற்ற முடியும் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதனிடையே சீனா தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன அதிகாரிகள் நிலைமையை திறம்பட நிர்வகித்து வருவதாகவும், சீனாவில் பரவி வரும் சுவாச நோய் என்பது பல நாடுகளில் மிகவும் பொதுவான நிகழ்வு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.