48 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; அந்த இ-மெயிலில் என்ன இருந்தது – பரபரப்பு!
48 பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரில், எலகங்கா, பசவேஸ்வரா நகர் உள்பட பல இடங்களில் உள்ள 48 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கியது.
தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில், வெடிகுண்டு நிபுணர்கள் சென்று அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்ததில் வெடிக்கும் தன்மை கொண்ட எந்த பொருட்களும் இல்லை எனவும், இ-மெயில் மிரட்டல் என்பது புரளி என்பதும் தெரியவந்தது.
இ-மெயில் தகவல்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் என்பது Kharijites என்ற பெயரில், பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் வெடிபொருட்கள் உள்ளன. அல்லாவின் பாதையில் தியாகிகள் நூற்றுக்கணக்கான உருவ வழிபாட்டாளர்களைக் கொன்றனர்.
நீங்கள் அல்லாவின் எதிரிகளாக இருந்தால் உங்களையும், உங்களின் குழந்தைகளையும் கொன்று விடுவோம். புத்த மதம் முதல் பிற மத உருவ வழிபாடுகளை கைவிட வேண்டும். நீங்கள் எங்களின் அடிமைகளாக உண்மையான மதத்தை ஏற்று கொள்ள வேண்டும். உருவ வழிபாட்டை புறக்கணிக்க வேண்டும்.
அதோடு அல்லாவின் உண்மையான மார்க்கத்தை இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும்.நீங்கள் இஸ்லாமுக்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் இஸ்லாமின் வாளுக்கு பதில் சொல்லி இறக்க நேரிடும். அல்லாஹூ அக்பர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.