யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய்; காரணம் யார்?
யாழில் இரட்டைப் பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்த ஐந்து நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் 25 வயதான இளம் தாயின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததது.
இச்சம்பவம் குறித்து சமூக நலன் விரும்பி ஒருவர் தனது கருத்தை முகநூலில் பதிவிட்டுள்ளதாவ்து,
கடந்த 21.11.2023 ஆம் திகதி பிரசவ வலியின் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே சிசேரியன் சிகிச்சை மூலம் இரண்டு குழந்தைகளை இளம் தாயான விதுஷா ஈன்றெடுத்துள்ளார்.
பிரசவம் நடந்த அடுத்த நாள் மாலையில் அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாகக் கூறி யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பட்டார்.
மேலதிக சிகிச்சை வீட்டை வந்தடைந்த பின் விதுஷாவின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து பருத்தித்துறை றூபின்ஸ் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றபோது வைத்தியரின் ஆலோசனைக்கமைவாக பருத்தித் துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டு சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறுநீரகம் முழுவதுமாக கிருமித்தொற்று அனைத்து உறுப்புகளும் பழுதடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக விதுஷாவை தயார்நிலையில் வைத்திருந்தனர்.
சிறிது நேரத்தின் பின்னர் காப்பாற்றமுடியாது என கைவிரித்து விட்டனர்.
விதுஷாவின் மரணம் குறித்த விசாரணையின்போது வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரி மற்றும் பருத்தித்துறை பதில் நீதவான் ஆகியோர் மரணம் குறித்து சந்தேகப்பட எதுவும் இல்லை எனத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.