பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
பிலிப்பின்ஸில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நாட்டின் தெற்குப் பகுதி தீவான மிண்டனாவுக்கு அருகே 32 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் பதிவானது.இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் மற்றும் அதன் சக்தியை அடிப்படையாகக் கொண்டு பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தெற்கு பிலிப்பின்ஸ், இந்தோனேசியாவின் சில பகுதிகள், பலாவ், மலேசியா ஆகிய நாடுகளில் சுனாமி ஏற்படலாம் என்று அந்த மையம் எச்சரித்துள்ளது.அதையடுத்து, அபாயப் பகுதிகளில் வசிப்பவா்கள் அனைவரும் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு பிலிப்பின்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது.புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.