ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு: அனைத்து சேவைகளும் ரத்து
ஜேர்மனியின் தெற்குப் பகுதியில் உள்ள பவேரியா மாநிலத்தில் இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக விமானம் மற்றும் ரயில் இணைப்புகள் முடங்கியுள்ளன.
ஜேர்மனியில் தொடரும் கடும் பனிப்கொழிவு
இதன் காரணமாக அனைத்து விமானங்களும் ரயில் சேவைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஆஸ்திரிய நகரங்களான சால்ஸ்பர்க் மற்றும் இன்ஸ்ப்ரூக் உடனான இணைப்புகள் உட்பட, முக்கிய போக்குவரத்து மையத்திற்கு மற்றும் அங்கிருந்து வரும் பிராந்திய மற்றும் நீண்ட தூர சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
⚠️⚠️⚠️Due to the continuing heavy snowfall, there will be no air traffic probably until 6 a.m. tomorrow, Dec 3.
Please do not travel to the airport today and check the status of your flight with your airline before traveling to the airport tomorrow: https://t.co/Jx2wmZft2d pic.twitter.com/e3KgTJZyoT— Munich Airport (@MUC_Airport) December 2, 2023
முனிச் மற்றும் உல்மில் சில ரயில்களில் உள்ள பயணிகள் தங்கள் இரவை ரயிலிலேயே கழிக்க வேண்டியதாக இருந்துள்ளது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக யூனியன் பெர்லினுக்கு எதிரான பேயர்ன் முனிச்சின் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
⚠️ Today’s Bundesliga home match against @fcunion_en has been postponed due to extreme snowfall in Munich.
More details ➡️ https://t.co/DNnIiMcdh2#FCBFCU pic.twitter.com/FO4lm5oMV6
— FC Bayern Munich (@FCBayernEN) December 2, 2023
தெற்கு, தென்கிழக்கு மற்றும் மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தொடரும் என்று ஜெர்மன் வானிலை சேவை தெரிவித்துள்ளது.
மேலும் பவேரியாவின் சாலைகளில் ஏராளமான விபத்துகளும் சொத்து சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.