ஆசியாவின் மையத் துறைமுகமாக மாறவுள்ள கொழும்புத் துறைமுகம்!
அதிகமான கப்பல்களை ஈர்த்து, ஆசியாவின் மையத் துறைமுகமாக கொழும்புத்துறைமுகம் மாறவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
முனையத்தின் நிர்மாணப்பணிகளைப் பார்வையிடுவதற்காக சென்றிருந்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று பெரிய கப்பல்களை
“தற்போது நடைபெற்று வரும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் நிர்மாணப்பணிகள் அடுத்த ஆண்டின் (2024) நடுப்பகுதியில் நிறைவடையும்.
இந்தக் கிழக்கு கொள்கலன் முனையத்தின் நீளம் 1,400 மீட்டராக இருப்பதனால் இங்கு மூன்று பெரிய கப்பல்களை ஒரே நேரத்தில் நிறுத்தக் கூடியவாறு இருக்கும்.
மேலும் இந்த முனையத்தின் அபிவிருத்திக்காக சுமார் 585 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தவிரவும், இதன் நிர்மாணப்பணிகளுக்காக சீனா இன்ஜினியரிங் மற்றும் அக்சஸ் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் கட்டுமான ஒப்பந்ததாரர்களாக நியமிக்கப்பட்டுள்ளன.
ஆசியாவின் முக்கிய துறைமுகம்
அதுமாத்திரமல்லாமல் இந்த முனையத்தின் கொள்கலன் பரப்பளவு 75 ஹெக்டேயராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 3 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முனையமானது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஒரு அரை தானியங்கி முனையமாக செயல்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது, கொழும்பு துறைமுகம் ஆசியாவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.