;
Athirady Tamil News

வீட்டிற்கொரு விமானம் வைத்திருக்கும் கிராமம் பற்றி அறிவீர்களா!

0

உலகில் ஒரு கிராமத்தில் மக்கள் தமது அன்றாட தேவைக்காக வீட்டிற்கு ஒரு விமானத்தை வைத்துள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க் என்ற கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக விமானத்தை பயன்படுத்தி வருகிறார்களாம்.

விமானம் வைத்திருக்க விமான ஓட்டிகளுக்கான லைசன்ஸ் மற்றும் விமானத்தை இயக்குவது குறித்த விவரங்களை தெரிந்தவர்கள் மட்டுமே விமானம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவர்களை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஓய்வு பெற்ற விமானிகள்
இந்த கேமரூன் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற விமானிகளாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களுடன் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் 1963 -ம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது.

இங்கு மொத்தம் 124 வீடுகள் உள்ளன. விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறக்கவும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் 100 அடி அகலத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்கா, விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்தது.

இந்த நிலையில்தான் இந்த விமான நிலையங்களை ஓய்வு பெற்ற ராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமான பூங்காவாக மேம்படுத்த அந்த நாட்டின் விமான போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதனால்தான் கேமரூன் ஏர்பார்க் கிராமத்தில் வீட்டிற்கு ஒரு விமானம் வைத்திருக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.