மருத்துவ வழங்கல் பிரிவிற்கு புதிய நியமனங்கள்!
மருத்துவ வழங்கல் பிரிவுக்கு இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவிற்கு பதில் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பதில் பணிப்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி இறக்குமதி செய்யப்பட்டப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்கிரமநாயக்க அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அதன்படி சுகாதார அமைச்சின் பதில் பணிப்பாளராக டெதுன டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பிரதிப் பணிப்பாளராக சுதத் தர்மரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.