சென்னையில் சாலையை கடந்த பெரிய முதலை: விடிய விடிய கொட்டும் மழையால் மக்கள் அவதி
சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே பெரிய முதலை சாலையை கடந்து செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டி தீர்க்கும் கனமழை
சென்னை மற்றும் வட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சென்னைக்கு 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று மாலை 5 மணியளவில் ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
People were advised not to venture to water bodies near VIT/Nedungundram Lake as a crocodile was spotted near the lake.
Video credits: Special Arrangement pic.twitter.com/REyes4YnLJ— The Hindu (@the_hindu) December 3, 2023
இதனிடையே சென்னை திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
சாலையை கடந்த முதலை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி வரும் நிலையில், பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளிக்கு அருகே பெரிய முதலை ஒன்று சாலையை கடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னையில் பெரிய முதலை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.