முதன் முறையாக நாடாளுமன்றத்தினுள் 200 மாற்றுதிதிறனாளிகள்!
ஆண்டுதோறும் டிசம்பர் 03 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இயலாமையுடைய நபர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி, ஏறத்தாழ 200 இயலாமையுடைய சிறுவர்கள் நேற்று (04.12.2023) நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.
இயலாமையுடைய சிறுவர்கள் சுமார் 200 பேர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளமை வரலாற்றில் முதன்முறையாக நடந்த தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும் என்பதை நினைவுபடுத்திய சபாநாயகர், இந்த சிறுவர்கள் உட்பட இலங்கையிலுள்ள அனைத்து இயலாமையுடைய சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கை அனைத்து வகையிலும் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளா
இதன்போது கருத்துத் தெரிவித்த நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் குறிப்பிடுகையில், இயலாமையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இயலாமையுடைய சிறுவர்களுக்கான உள்வாங்கப்பட்ட கல்வியை வழங்குவதற்கான சவாலை புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் வெற்றிகொள்ள முடியும் என கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இதன் மூலம் இயலாமையுடைய சிறுவர்கள் சாதாரண சிறுவர்களுடன் சேர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும் என கல்வி அமைச்சர் நினைவுபடுத்தினார்.
அத்துடன், சிறுவயதிலேயே குழந்தைகளிடம் தோன்றும் குறைபாடுகளைக் கண்டறிந்து அந்த குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க பிரத்தியேக இடத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.