;
Athirady Tamil News

லண்டனில் யூத சிறுவர்களுக்கு நிற்காமல் சென்ற பேருந்து: சாரதியை பாராட்டிய சக பயணிகள்

0

பிரித்தானியாவில் பேருந்துக்காக காத்திருந்த யூத குழந்தைகளை ஏற்றிக் கொள்ளாமல் பேருந்து சாரதி சென்ற சம்பவம் கவனத்திற்கு வந்துள்ளது.

புறக்கணிக்கப்பட்ட யூத குழந்தைகள்
வடக்கு லண்டனின் ஸ்டாம்போர்ட் ஹில் பகுதியில் உள்ள எகெர்டன் சாலையில் உள்ள நிறுத்தத்தில் பேருந்திற்காக சில யூத பள்ளி சிறுவர்கள் காத்துக்கொண்டு இருந்துள்ளனர்.

சிறுவர்கள் பேருந்தை நிறுத்துவதற்கான சிக்னலை காட்டிய பிறகு, முதலில் பேருந்து தனது வேகத்தை குறைத்து அருகில் சென்றுள்ளது.

ஆனால் அருகில் சென்று உடன் அவர்கள் யூத குழந்தைகள் என தெரிந்து பேருந்தை நிறுத்தாமல் பேருந்து சாரதி ஓட்டிச் சென்றுள்ளார்.

பேருந்து ஓட்டுநரின் இந்த செயலை பேருந்திற்குள் இருந்த சில பயணிகள் உற்சாகம் வழங்கியதோடு, பேருந்தை நிறுத்தாமல் சென்ற டிரைவருக்கு பாரட்டையும் சில யூத எதிர்ப்பு கருத்து கொண்ட பயணிகள் சாரதிக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நவம்பர் 26ம் திகதி வாட்டர்லூ நோக்கி சென்ற 76 பேருந்தில் காலை 8.05 மணியளவில் நடந்துள்ளது.

இந்த மோசமான அச்சுறுத்தல், அதிர்ச்சி சம்பவத்தை பேருந்துக்குள் இருந்த யூத பயணி ஒருவர் ஷோம்ரிம் – யூத சமூக பாதுகாப்பு மற்றும் மெட் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இரண்டாவது சம்பவம்

இந்த சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு பிறகு, அதே போன்று ஹாக்னியில் உள்ள ராவன்ஸ்டேல் சாலையில் 318 பேருந்தில் இரவு 7.40 மணியளவில் நடந்துள்ளது.

இதில், யூத சிறுவன் ஒருவர் பேருந்தை நிறுத்துவதற்காக சிக்னலை செய்த பிறகு, முதலில் பேருந்தை நிதானப்படுத்தி மெல்ல அருகில் சென்ற சாரதி நிற்பது யூத சிறுவனின் என அறிந்த பிறகு பேருந்தை நிறுத்தாமல் விரைவாக எடுத்துச் சென்றுள்ளார்.

மேலும் அதற்கு அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை அந்த சாரதி ஏற்றிக் கொண்டார். என பேருந்தில் பயணம் செய்த யூத சிறுமி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யூத எதிர்ப்பு நடவடிக்கையானது அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ்-இஸ்ரேல் போருக்கு பிறகு அதிகரித்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.