ஒருநாளில் மழைநீர் வடிந்துவிடுமென எதிர்பார்க்கிறோம்: அமைச்சர் உதயநிதி
ஒருநாளில் மழை முழுவதுமாக வடிந்துவிடுமென எதிர்பார்க்கிறோம் என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
குறைய தொடங்கிய மழை
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வந்தது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மிக்ஜாம் புயலானது தற்போது ஆந்திராவை நோக்கி நகர தொடங்கியதை அடுத்து சென்னையில் மழை பொழிவின் அளவு படியாக படியாக குறைய தொடங்கியுள்ளது.
உதயநிதி தகவல்
இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள வெள்ள பாதிப்பு முகாம்களை ஆய்வு செய்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒருநாளில் மழை முழுவதுமாக வடிந்துவிடுமென எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், சென்னையில் இந்த அளவுக்கு அதிகமான மழை பெய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வேகமாக எடுத்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு தேவையான அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மீண்டு வர ஒருநாள் தேவைப்படும், மேலும் ஒரு நாளில் மழை முழுவதும் வடிந்துவிடுமென எதிர்பார்க்கிறோம், காலையில் சகஜ நிலை வந்துவிடுவோம் எனவும் தமிழக அமைச்சர் உதயநிதி தகவல் தெரிவித்துள்ளார்.