;
Athirady Tamil News

காசாவில் அகதிகள் தங்கியிருந்த பாடசாலைகள் மீது கோர தாக்குதல் : பெருமளவானோர் பலி

0

காசா நகரத்தில் உள்ள அல்-தர்ராஜ் பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த இரண்டு பாடசாலைகளை குறிவைத்து இஸ்ரேலிய படையினர் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் குறைந்தது 50 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவித்தன.

பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் முகவரமைப்பால் நடத்தப்படுமு் (UNRWA) பாடசாலை மற்றும் அல்-தர்ராஜ் பகுதியில் உள்ள தியாகி அசாத் சஃப்தாவி பாடசாலை ஆகியவற்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் சரமாரியான ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் டசின் கணக்கான உடல்கள்
உயிரிழந்தவர்களின் டசின் கணக்கான உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அல்-ஜெய்டவுன் பகுதியில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

தொடர் தாக்குதலால் மீட்பு பணி சிரமத்தில்
அப்பகுதி மீது தீவிரமான ஷெல் தாக்குதலின் விளைவாக உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்க பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அம்புலன்ஸ் குழுவினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.