கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய 59ஆவது நினைவு தின நிகழ்வுகள்
கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய 59ஆவது நினைவு தின நிகழ்வுகள் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
யாழ் மாவட்ட கூட்டுறவுச்சபையின் உபதலைவர் க.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் கலந்துகொண்டதுடன் , கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய திருவுருவபடத்திற்கான மலர்மாலை அணிவித்தார்.
இதனை தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களில், சிறப்பாக செயலாற்றிய 59 கூட்டுறவாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
மேலும்யாழ் மாவட்ட கூட்டுறவாளர் சபையினால் நடாத்தப்பட்ட மனைப்பொருளியல் பயிற்சிநெறியினை பூர்த்தி 70 மகளிர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன