இரவுவேளையும் தொடரும் இஸ்ரேல் படையின் தாக்குதல்கள் :கொத்து கொத்தாக போகும் உயிர்கள்
இஸ்ரேலிய படைகள் செவ்வாய் இரவு தெற்கு, மத்திய மற்றும் வடக்கு முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் தீவிர ஷெல் தாக்குதலைத் தொடர்ந்தன.இதில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய காசா பகுதியில் உள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை, நகரத்தில் உள்ள அபு மெஸ்பே குடும்பத்தின் வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் நடத்திய வான்வழித் தாக்குதலின் விளைவாக 45 பேர் உயிரிழந்ததுடன் டசின் கணக்கானோர்காயமடைந்ததாகக் கூறியது.
இஸ்ரேலிய போர் விமானங்கள்
இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியில் உள்ள ஜபாலியாவின் மேற்கில் உள்ள அல்-ஃபலூஜா பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்து வரும் ஹஃப்சா பள்ளிக்கு அருகில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது, இது பலருக்கு காயங்களை ஏற்படுத்தியது.
ஜெட் விமானங்கள் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் அருகாமையிலும் தீவிர தாக்குதல்களை நடத்தின.
மருத்துவமனையில் இருந்து சுமார் 1,500 மீட்டர் தொலைவில்
காயமடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர் குழுவினரால் நிரம்பியிருக்கும் மருத்துவமனையில் இருந்து சுமார் 1,500 மீட்டர் தொலைவில் இராணுவ டாங்கிகளும் நிறுத்தப்பட்டன.
தீவிர இஸ்ரேலிய எறிகணைத் தாக்குதலின் விளைவாக இடிபாடுகளைத் தோண்டித் தேட முடியாத நிலையில்உயிரிழந்தவர்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.