உக்ரைனில் ரஷ்யாவிற்கு பேரிழப்பு – ரஷ்ய துணை இராணுவத்தளபதி பலி
உக்ரைனில் ரஷ்ய துணை இராணுவ தளபதி கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் வோரோனேஜ் பிராந்தியத்தின் ஆளுநர் விளாடிமிர் சவாட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் 14வது இராணுவப் படையின் துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் விளாடிமிர் ஜவாட்ஸ்கி உக்ரைனில் கொல்லப்பட்டதாக பிராந்திய உயர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
“சிறப்பு நடவடிக்கை மண்டலத்தில் உள்ள ஒரு போர் முனையில்”
ஜவாட்ஸ்கி “சிறப்பு நடவடிக்கை மண்டலத்தில் உள்ள ஒரு போர் முனையில்” இறந்தார் என்று ரஷ்யாவின் வோரோனேஜ் பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் திங்களன்று தெரிவித்த நிலையில் மேலதிகதகவல் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.
12 வது மூத்த அதிகாரி
“சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்பது உக்ரைனில் பெப்ரவரி 2022 இல் தொடங்கிய போரை விவரிக்க ரஷ்யா பயன்படுத்தும் சொல்.
ஜவாட்ஸ்கியின் மரணம் ரஷ்யாவால் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட ஏழாவது மேஜர் ஜெனரலாகக் குறிக்கப்பட்டது, போர் தொடங்கியதில் இருந்து இறந்ததாக அறிவிக்கப்பட்ட 12 வது மூத்த அதிகாரி என்று புலனாய்வு செய்தி நிறுவனம் iStories தெரிவித்துள்ளது.