ஒருவர் எத்தனை வங்கி கணக்கு வைத்திருக்கலாம்? இதுக்கு மேல் போனால்.. எச்சரிக்கை!
ரிசர்வ் வங்கியின் புதிய விதியை தெரிந்து கொள்ளுங்கள்.
ரிசர்வ் வங்கி
மக்கள் தங்கள் தேவைக்கேற்ப வங்கிக் கணக்கைத் தொடங்க விருப்பம் உள்ளது. நடப்புக் கணக்கு, சம்பளக் கணக்கு, கூட்டுக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கு என பல..
ரிசர்வ் வங்கி அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வாடிக்கையாளர் ஒருவர் அதிகபட்சமாக எத்தனை வங்கி கணக்கு வரையிலும் வைத்திருக்கலாம் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அபராதம்
அதன்படி, ஒருவர் எத்தனை வங்கி கணக்குகள் வைத்திருந்தாலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை கணக்கில் இருக்க வேண்டும். இவ்வாறு, குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத பட்சத்தில் அபராதமும் விதிக்கப்படும். அதே போல, நீங்கள் வங்கி கணக்கு திறந்துவிட்டு பயன்படுத்தாமல் இருந்தாலும் எஸ்எம்எஸ் வசதி, ஏடிஎம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதனால், தேவையான வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தவும். தேவையில்லாத பட்சத்தில் வங்கி கணக்கை மூடிவிட்டு வேறு கணக்கை திறந்துகொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.