ஜனவரியில் இருந்து இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்: ரணில் அதிரடி
நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று(06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சகல துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டமும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால சந்ததியினர்
பழமையான முறைமகளை பின்பற்றுவதன் மூலம் நாட்டிற்கு சிறந்த எதிர்காலம் இல்லை எனவும், கடந்த சில வருடங்களில் ஒரு நாடு என்ற வகையில் நாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் பெற்றுக்கொள்ள கூடாது எனவும் அதிபர் கூறியுள்ளார்.