;
Athirady Tamil News

இராணுவ வீரருக்கு 14 வருடங்களுக்குப் பின் அதிரடி தீர்ப்பு வழங்கிய மன்னார் நீதிமன்றம்!

0

மன்னாரில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

14 வருடங்களுக்கு பின்னர் மன்னார் மேல் நீதிமன்றம் இன்றைய தினம் (06-12-2023) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மன்னார் – பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் கடந்த 02-10-2009 அன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ சேவையில் இருந்த போது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்தார்.

குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

முருங்கன் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தீர்ப்புக்காக இன்று (6) மன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.எம்.மிகால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இரு மனிதப் படுகொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில், மேல் நீதிமன்ற நீதிபதியால் குறித்த இராணுவ வீரருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு வழங்கும் போது மேல் நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகள் அணைக்கப்பட்டு நீதிமன்றத்தின் கதவுகள் பூட்டப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டது. எழுதப்பட்டதன் பின்னர் எழுதப்பட்ட பேனா நீதிபதியால் உடைக்கப்பட்டது.

மேலும் இன்றைய தினம் மரணத்தண்டனை விதித்த சந்தேக நபரை போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்பும்படி கட்டளையிடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.