புதிதாக VAT வரி சேர்க்கப்படும் பொருட்கள்
குழந்தைகளுக்கான போஷாக்கு உணவு, உரம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகியவற்றுக்கு VAT வரியை அறவிடுவதற்கு நிதியமைச்சு எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (2023.12.06) இடம்பெற்ற நாடாளுமன்ற உரையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த அத்தியாவசிய பொருட்களுக்கு VAT வரியிலிருந்து விலக்கம் அளிக்குமாறு தனது குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
ஏராளமான விவசாயிகள் மீது VAT வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு வரி வருவாய் இன்றியமையாதது என்று அரசு கூறுகிறது. ஆனால் வரி விதிப்பில் நியாயம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
இப்போது டீசலுக்கும் VAT வரி விதிக்கப்பட்டுள்ளது.