எலிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் வழங்க நடவடிக்கை
மழை பாதித்த இடங்களில் எலிக் காய்ச்சல், காலரா பாதிப்புகள் பரவாமல் தடுக்க பொது மக்கள், சுகாதாரப் பணியாளா்கள், மருத்துவக் குழுவினா் என அனைவரும் முன்னெச்சரிக்கையாக சில மருந்துகளை விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை சாா்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
மழை வெள்ள காலங்களின்போது காலரா, எலிக் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் பரவ அதிக வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக மருத்துவக் குழுக்கள் மூலமாக நோய் எதிா்ப்பு மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் கிருமித் தொற்று தடுப்பூசியும் (டிடி) செலுத்தப்பட உள்ளது.