வீட்டுக்கு செல்லவுள்ள சிவில் பாதுகாப்பு பணியாளர்கள்
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விரும்பினால் இழப்பீடு பெற்று சேவையில் இருந்து விலகும் வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நேற்றறு (6) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளியேறும்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், சேவையின் அளவைக் கருத்தில் கொண்டு இழப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் தேவைக்கு ஏற்ப சேவையைப் பெற முடியாது
அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ்.குமாரசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்புப் படையில் சுமார் முப்பத்தி நான்காயிரம் பேர் உள்ளதாகவும், நாட்டின் தேவைக்கு ஏற்ப அவர்களிடமிருந்து சேவையைப் பெற முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.